இன்றைய ராசி பலன்கள் 12-08-2019



மேஷம்
நட்பு வட்டம் விரியும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். விரோதங்கள் மறையும். வள்ளல்கள் ஒத்துழைப்புடன் நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். சுப செய்திகள் வீடு தேடி வரும்.
ரிஷபம்
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.
மிதுனம்
வரவு திருப்தி தரும் நாள். அத்யாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக் களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சி கைகூடும்.
கடகம்
அஞ்சல்வழித் தகவல் ஆச்சரியப்பட வைக்கும் நாள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். உடன்பிறப்புகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.
சிம்மம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பழகிய நண்பர்கள் பணத் தேவையை பூர்த்தி செய்வர்.
கன்னி
வளர்ச்சி கூடும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தியொன்று வந்து சேரும். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பழைய வாகனங்களை மாற்றும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
விருச்சகம்
புகழ்கூடும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தெய்வீகப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
ஆனந்த வாழ்விற்கு அஸ்திவாரமிடும் நாள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித் தகவல் உறுதுணை புரியும். மனதில் நினைத்த காரியம் ஒன்று இன்று நடைபெறலாம்.
மகரம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை மறக்காமல் நன்றி செலுத்துவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.
கும்பம்
அன்பால் எதையும் சாதித்துக் காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக்குழப்பங்கள் தீர்ந்து தெளிவு ஏற்படும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர்.
மீனம்
வளர்ச்சி கூடும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி, எடுத்த புது முயற்சி வெற்றி தரும். தொழில் பங்குதாரர்கள் பக்குவமாக நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.