ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 13-08-2019

மேஷம்

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.. இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். தந்தையுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம். செரிமானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்குப் பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.

மிதுனம்

எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன்  மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் விரைவாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.

கடகம்

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியுடன் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். ஆனால் சக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படக் கூடும்.

சிம்மம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். வெளியிடங்களில் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளிலும் கூட கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன்  மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

துலாம்

எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

விருச்சிகம்

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயன் தருவதாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

தனுசு

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார். சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

மகரம்

அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும்.. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கும்பம்

உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக் கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பாக்கித் தொகைக்காக வாடிக்கையாளருடன் சிறு சச்சரவு ஏற்படக்கூடும்.

மீனம்

அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள். சகோதரிடம் கேட்ட உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரரின் ஆதரவு கிடைக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker