இன்றைய ராசி பலன்கள் 15-08-2019



மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி களைத் தொடரும் எண்ணம் உருவாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
ரிஷபம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் உண்டு. மறதியால் விட்டுப் போன பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணம் பலன் தரும்.
மிதுனம்
அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். அலைபேசி வழித் தகவலால் ஆதாயம் உண்டு. வரன்கள் வந்து வாயிற் கதவைத் தட்டும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
கடகம்
எண்ணங்களைச் செயலாக்க யாரேனும் ஒருவரின் ஒத்துழைப்பு தேவைப்படும் நாள். அலைச்சல் கூடும். விரயங்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
சிம்மம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். எதையும் சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள்.
கன்னி
குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துமகிழும் நாள். கூடப் பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பண வரவு திருப்தி தரும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
துலாம்
பூமி வாங்கும் யோகம் கிட்டும் நாள். புதிய பாதை புலப்படும். தாய்வழி ஆதரவு உண்டு. வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
விருச்சகம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வசதிகள் பெருகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தபால் வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.
தனுசு
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் பண வரவுஉண்டு. திருமணத் தடை அகலும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மகரம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்களால் விரயம் உண்டு. உத்தியோகத் தில் இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.
கும்பம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதார நலன் கருதி பயண மொன்றை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர் கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.
மீனம்
சுபவிரயம் ஏற்படும் நாள். துணிவும், தன்னம் பிக்கையும் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆர்வத்தோடு செயலாற்றுவீர்கள். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கூடுதலாகக் கிடைக்கும்.