இன்றைய ராசி பலன்கள் 18-08-2019



மேஷம்
முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை அவசரமாக முடிப்பீர்கள்.தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
ஆரோக்கியத்தில் சிறு சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலுக்காக எடுத்த முயற்சி கடைசி நேரத்தில் கைகூடலாம்.
மிதுனம்
பயணங்களால் பலன்கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் சிறுவிரயங்களை மேற்கொள்வீர்கள்.
கடகம்
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை பெற வேண்டிய நாள். காலை நேரத்திலேயே காரியத் தடை உண்டு. வரவை விட செலவு கூடும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது.
சிம்மம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வருமானப் பற்றாக்குறை உண்டு. உறவினர்கள் பகை உருவாகும். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாகத் தொல்லை உண்டு.
கன்னி
உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். நண்பர்களிடம் கலகலப்பாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். வியாபார விரோதங்கள் மறையும்.
துலாம்
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும் நாள். ஊர்மாற்றம் உறுதியாகலாம். குடும்பச் சுமை கூடும். சோம்பல் காரணமாக திட்டமிட்ட காரியமொன்றை மாற்றி அமைக்க நேரிடலாம்.
விருச்சகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப் படுவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணம் பலன் தரும்.
தனுசு
தடைகளை அகற்றித் தன்னிறைவு காணும் நாள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு.
மகரம்
தொழிலை விரிவு செய்ய தொகை வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும்.
கும்பம்
நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். பெற்றோர் மூலம் பெருமைக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர்.
மீனம்
சவால்களைச் சமாளிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரலாம்.