ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 19-08-2019

மேஷம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்

உயர் அதிகாரிகள் ஒத்தாசையாக இருக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் இன்று சில மாற்றங்களைச் செய்வீர்கள். இளைய சகோதரத்தால் நன்மை கிட்டும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்

பணத்தட்டுப்பாடு அகலும் நாள். நீங்கள் தேடிச்சென்ற நபர் தானே வந்து சந்திப்பார். அலைபேசி வாயிலாக அனுகூலச் செய்தி வந்து சேரும். திடீர் தனலாபம் உண்டு. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

தொட்டது துளிர்விடும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்

சிம்மம்

அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தைக் காணும் நாள். குடும்பச்சுமை கூடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. விரயங்கள் கூடுதலாக ஏற்படும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடையும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

துலாம்

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.

விருச்சகம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கைக்கு கிடைக்கலாம்.

தனுசு

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மகரம்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். ஆதாயம் தரும் வேலை அக்கறை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும்.

கும்பம்

வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சுகங்களும், சந்தோ‌ஷங்களும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி கைகூடும்.

மீனம்

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நன்மை கிட்டும். வெளியூர் பயணங்களின்போது பொருட்களில் கவனம் தேவை. உடல் ரீதியாக உபாதைகள் ஏற்படலாம்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker