இன்றைய ராசி பலன்கள் 21-08-2019



மேஷம்
எடுத்த முடிவைத் திடீரென மாற்றியமைத்துக் கொள்ளும் நாள். ஏராளமாகச் செலவு வருகின்றதே என்று கவலைப் படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் உண்டு.
ரிஷபம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
மிதுனம்
யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் எண்ணம் உருவாகும். அதிகாரிகளால் நன்மை உண்டு.
கடகம்
பாராட்டு மழையில் நனையும் நாள். பணவரவு உண்டு. தொழில் ரீதியாக முக்கிய முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும். அரசு வழி அனுகூலம் உண்டு.
சிம்மம்
வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பணியொன்றை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். காணாமல் போன
பொருளொன்று கைக்கு வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
கன்னி
இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாள். எதையும் ஒருமறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாமல் போகலாம். பணியாளர்களால் தொல்லையுண்டு.
துலாம்
சொந்தங்களால் வந்த தொல்லை அகலும் நாள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி ஏற்படும். வருங்கால நலன்கருதி புதிய திட்டம் ஒன்றைத் தீட்டுவீர்கள். பொது வாழ்வில் முக்கியப் பொறுப்புகள் வந்து சேரலாம்
விருச்சகம்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
கடன்சுமை குறையும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
சங்கடங்களைச் சாதுர்யமாகச் சமாளிக்கும் நாள். சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனப் பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். தாய் வழி ஆதரவில் இருந்த தடைகள் அகலும்.
கும்பம்
செல்வ நிலை உயரும் நாள். ஆதரவுக் கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதர வழிப் பிரச்சினைகள் அகலும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
மீனம்
தனவரவு திருப்தி தரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். சுபச் செய்தியொன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம். பயணம் பலன் தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.