ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப் பாதிப்பு அகலும். வீட்டு உபயோகப் பொருட் களை வாங்குவதால் செலவுகள் உருவாகலாம். எவ்வளவு தான் பொறுப்பாகச் செயல்பட்டாலும் ஏதாவது ஒரு மனக்குறை ஏற்படலாம்.

ரிஷபம்

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கலாம். அந்நிய தேச பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும்.

மிதுனம்

அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும் நாள்.  வருமானம் போதுமானதாக இருக் கும். தேவையில்லாத வி‌ஷயங்களில் தலை யிடுவதைத்  தவிர்ப்பது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

கடகம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். மனதில் நினைத்ததை மறுநிமிடமே செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளை களால் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித் தனமாகும்.

சிம்மம்

காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். பயணம் பலன் தரும்.   மாற்றினத்தவர்களின் மகத்தான ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் கூடும். செல்போன் வழித் தகவல் சிந்திக்க வைக்கும்.

கன்னி

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக் கும் நாள். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங் காகும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் பகை மாறும். உள்ளத்தில் மகிழச்சி கூடும்.

துலாம்

யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நிதி நிலை உயர எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பகையொன்று நட்பாகலாம்.

விருச்சகம்

நாலாபுறத்திலிருந்தும் நல்ல தகவல் கிடைக்கும் நாள். நண்பர்களிடம் நயமாகப்  பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு எடுத்த முயற்சி வெற்றி பெறும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு

துன்பங்கள் தூளாகும் நாள். மூத்தவர் களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மன ஆறுதல் தரும் விதத்தில் பயணமொன்று உருவாகலாம். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும்.

மகரம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். குடும்ப வரு மானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும்.

கும்பம்

விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி யுடன் செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை  முடிக்க அதிக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லை யுண்டு. இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.

மீனம்

இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரலாம். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ, அவர்களே உங்களைத் தேடிவரும் வாய்ப்பு உண்டு. தனவரவு தாராளமாக வந்து சேரும்.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close