இன்றைய (01.01.2020) ராசி பலன்



மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வெளி வட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.
ரிஷபம்
விரோதிகள் விலகும் நாள். தனவரவு உண்டு. இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். தொலைபேசி வழித்தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும்.
மிதுனம்
தொட்டகாரியம் வெற்றிபெறும் நாள். தொழில் முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைபிடிப்போடு செயல்படுவீர்கள்.
கடகம்
காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாள்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் அகல விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
சிம்மம்
அலைபேசி வழித்தகவலால் அனுகூலம் கிடைக்கும் நாள். ஆதரவுக்கரம் நீட்ட உறவினர் முன் வருவர். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெற்று மகிழச்சியைத் தரும்.
கன்னி
இனிமையானநாள், எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். தக்கசமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து முன்வருவர், பிரியமானவர்களுடன் குதூகலமான பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
துலாம்
சவால்களை சமாளிக்கும் நாள், சான்றோர்களின் சந்திப்பு உண்டு. பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தியுண்டு. மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும்.
விருச்சிகம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்திகள் வந்து சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் அனுகூலம் தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும்.
தனுஷ்
புதியபாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் யோகம் உண்டு. பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
மகரம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடை பெறும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்ட உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று சுமுகமாக முடியும்.
கும்பம்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவால் தொழில் வளர்ச்சி உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பிறருக்காக பொறுப்புச் சொல்லி வாங்கிகொடுத்த தொகை வந்துசேரும்.
மீனம்
பயணங்களால் பலன்கிட்டும் நாள். பாராட்டும், புகழும் கூடும். முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வந்து உதவுவர். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர் களை சேர்க்கலாமா என்று சிந்திப்பீர்கள்.