ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 03-03-2020

Today Raasi Palan 03-03-2020

மேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: எதையும் திட்டமிட்டுச் செய்யப்பாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும் உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டு வந்தவர்களில் மனம் மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீரகள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிம்மதி உண்டாகும் நாள்.

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள் .

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


கும்பம்:
பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகள் திரும்பும் நாள்.

மீனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close