இன்றைய ராசி பலன்கள் 09-08-2019



மேஷம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் அதிகரிக்கும். மற்றவர்களின் ஆலோசனை களைக் கேட்டு நடப்பது நல்லது.
ரிஷபம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு பற்றிய சந்தோஷமான செய்தியொன்று வந்து சேரும். புது முயற்சிஅனுகூலம் தரும்.
மிதுனம்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். குடும்பத் தேவை கள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சியில் இருந்து வந்த தடை அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கடகம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கைகூடும். தனவரவு திருப்தி தரும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற் கேற்றார்போல் செயல்படுவீர்கள்.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
கன்னி
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வியாபார விருத்தி உண்டு. வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத் தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பர். குடும்பச்சுமை கூடும்.
துலாம்
நெருக்கடி நிலை மாறும் நாள். நல்ல தகவல் இல்லம் வந்து சேரும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் போட்டிகள் குறையும். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் சம்மந்தமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அதிகார வர்க்கத்தினர் அருகில் இருந்து காரியத்தை முடித்துக் கொடுப்பர்.
தனுசு
குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத் தொழில் புரிவோருக்கு நன்மை ஏற்படும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த தகவல் நண்பர் மூலம் வந்து சேரும். வாரிசுகளால் உங்களுக்கு விரயம் உண்டு.
மகரம்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். தெய்வீக சிந்தனை மேலோங்கும். தவிர்க்க முடியாத விரயம் உண்டு. பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். மருத்துவச் செலவு உண்டு.
கும்பம்
பிரச்சினைகள் அகலும் நாள். பிரபலஸ் தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்துவந்தவர்கள் விலகுவர். இடமாற்றம், வீடு மாற்றம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும்.
மீனம்
பொருளாதார விருத்தி ஏற்படும் நாள். உறவினர்களின் உதவி கிட்டும். கடன் சுமை குறையும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு.