ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 22-08-2020. இதோ..!

Today Rasi Palan 22-08-2020

மேஷம் :

இன்றைய நாள் கடினமாக அமையாது. சுதந்திரமாக முடிவெடுக்க உறுதியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முயற்சி வெற்றியை தரும் நாள்.

ரிஷபம் :

உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். உறுதியான மனநிலை கொண்டு செயல்பட்டால் அதனை சமாளித்து வெற்றி காணலாம்.

மிதுனம் :

கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

கடகம் :

உங்கள் இலக்குகளை அடைய ஏற்றநாள். அதற்கான சரியான முயற்சியை மேற்கொள்ளுங்கள். உறுதியான மனநிலை வெற்றியை தேடித்தரும்.

சிம்மம் :

கடினமான சூழ்நிலை உருவாகும். அதனை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். பதட்டம் ஏற்படும். அமைதியாக நம்பிக்கையுடன் செயல்களை செய்ய வேண்டும்.

கன்னி :

உங்களுக்கான சௌகரியங்களை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம் :

உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் :

இன்றைய நாள் வெற்றிகரமாக அமையும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஓய்வின்றி செயல்படவேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

தனுசு :

உங்கள் திட்டங்கள் பலனளிக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும்.

மகரம் :

உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். திட்டமிட்டு செயல்களை சரியாக கையாள்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். பதட்டத்தை தவிர்த்திடுங்கள் நல்லது நடக்கும்.

கும்பம் :

தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்லது நடக்கும்.

மீனம் :

பணிச்சுமை அதிகமாக இருக்கும். புதிதாக ஏதோ ஒன்று சாதிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். கடினமான உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close