


மேஷம்
ஸ்ரீனிவாசப் பெருமானை வழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல்நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. மறதி அதிகரிக்கும். சுபவிரயங்கள் உண்டு.
ரிஷபம்
எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்.
மிதுனம்
அரங்கநாதனை வழிபட்டு ஆனந்தம் காண வேண்டிய நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். பிள்ளைகள் எதிர்கால நலன் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கடகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மகிழ்ச்சிக்குரிய தகவல் காலை நேரத்திலேயே வந்து சேரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். வரவு திருப்தி தரும். பயணங்களால் பலன் உண்டு.
சிம்மம்
பெருமானை வழிபட்டு பெருமைகளைக் காண வேண்டிய நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவு கிடைக்கும். வரவு திருப்தி தரும்.
கன்னி
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலை மாற்றச் சிந்தனை மேலோங்கும். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும்.
துலாம்
திருமண முயற்சி கைகூடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆப ரண, அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வீடு, நிலம் சம்மந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
அலைபேசி மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம் மதி காண்பீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் தன லாபம் உண்டு. தொழில் முன்னேற்றம் உண்டு.
கும்பம்
மகாவிஷ்ணுவை வழிபட்டு மகிழ்ச்சியைக் காண வேண்டிய நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.
மீனம்
திருமால் வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு எடுத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வரவு வந்து சேரும்.