ஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள் (04.03.2020)

Today Rasi Palan (04-03-2020)

மேஷம் :

வேலை வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் அகலும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் வேலைகளில் கவனம் தேவை.நிர்வாகத்தில் செய்யும் மாற்றங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும்.

ரிஷபம் :

குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை அமையும். பெரியோர்களை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சுபச் செய்திகள் உண்டாகும்.

மிதுனம் :

அந்நியர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். தனவரவுகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மனைகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் கைகூடும்.

கடகம் :

தொழில் சம்பந்தமான முயற்சிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்கவும்.

சிம்மம் :

தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் மனக்கசப்பு நேரிடலாம். புதுவிதமான உறவுகள் கிடைக்கும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கன்னி :

மனை சம்பந்தமான விஷயங்களில் சுமூகமான முடிவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகத்தால் இலாபம் உண்டாகும். வாக்குவன்மையால் புகழப்படுவீர்கள். புத்திரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

துலாம் :

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். இணையதளம் சம்பந்தமான பணியில் எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

விருச்சகம் :

உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பணியில் பிறரின் தலையீடுகளால் மனக்கசப்பு நேரிடலாம். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

தனுசு :

தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பங்காளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பெரியோர்களிடம் நற்பெயர் உண்டாகும். நீர்நிலை சம்பந்தமான துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் :

உடைமைகளில் கவனம் வேண்டும். தந்தை வழி உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

கும்பம் :

தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். பிறரின் பிரச்சனைகளில் தலையிடுவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். எனவே கவனம் தேவை. எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

மீனம் :

சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆரோக்கிய குறைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close