ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 04-09-2020. இதோ..!

Today Rasi Palan 04-09-2020

மேஷம் :

நண்பர்களால் நல்ல தகவல் கிடைக்கும் நாள். இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். புதியபாதை புலப்படும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

ரிஷபம் :

காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். உற்றார், உறவினர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். வியாபார முன்னேற்றம் உண்டு.

மிதுனம் :

தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடல் தாண்டிவரும் செய்தி அனுகூலமாக இருக்கும். அனுகூலம் மிக்கவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வித்திடும்.

கடகம் :

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பகை மாறும் நாள். வரவு திருப்திதரும். நல்ல வாய்ப்புகள் இல்லம் வந்து சேரும் நாள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

சிம்மம் :

காரிய வெற்றிக்கு கவனம் தேவைப்படும் நாள். அதிகாலையிலேயே மனக்கவலை தரும் தகவல் வரலாம். எதிர்பார்த்தது போல எதுவும் முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

கன்னி :

பணிச்சுமை அதிகரிக்கும் நாள். பாக்கிகளை வசூலிக்க புதுயுக்திகளைக் கையாளுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். அக்கம்,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.

துலாம் :

வருமானம் உயரும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் உதவி செய்ய முன்வருவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

விருச்சிகம் :

உடல்நலம் சீராகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். உறவினர்கள் தொலைபேசி வாயிலாக உங்களிடம் உதவி கேட்கலாம்.

தனுசு :

மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நாள். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறலாம். திடீர் செலவுகளால் கையிருப்புக்கரையும். குடும்பத்தினர்களிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம் :

நட்புவட்டம் விரிவடையும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.தொழில் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

கும்பம் :

தடைகள் அகலும் நாள். திட்ட மிட்டகாரியங்கள் திட்டபடியே நடக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அரை குறையாக நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மீனம் :

உடல் நலம் சீராகும். பக்குவமாகப் பேசி பாராட்டு பெறும் நாள். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நடைபெறாது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close