ஜோதிடம்

Rasi Palan இன்றைய நாள் ராசி பலன்கள்..!

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனு பவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்: பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நல்லது நடக்கும் நாள்.

கடகம்: வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்: மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். புது முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கன்னி: அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சிறப்பான நாள்.

தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிற்பகலுக்கு மேல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புகழ் உயரும் நாள்.

மகரம்: இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்: இன்று உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பானப் பலன்களைத் தரும்.

மீனம்: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. உயர்வு பெறும் நாள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close