ஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள் (06-03-2020)

Today Rasi Palan Tamil

மேஷம் :
தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

ரிஷபம் :
சமூகச் சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம். மாற்றம் உண்டாகும். தாய்மாமன் உறவுகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம் :
கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும்.

கடகம் :
நீர்நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மன வருத்தம் ஏற்படலாம். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். தாய், தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.

சிம்மம் :
இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்னைகளைச் சமாளித்துவிடுவீர்கள்.

கன்னி :
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம் :
புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமண வரன்கள் அமையும். மக்கள் தொடர்பு துறையில் இருந்தவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும்.

விருச்சகம் :
வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கவனத்துடன் செயல்படவும். உடல் சோர்வால் எடுத்த பணி நிறைவடைய காலதாமதமாகும்.

தனுசு :
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும். உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

மகரம் :
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம் :
பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தந்தையின் சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

மீனம் :
தொழில் திறமையால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.புதிய நுட்பங்களை பற்றிய அறிவு மேம்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாகன வசதி மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close