ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 08-08-2019

மேஷம்

ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

நிகழ்காலத் தேவைகள்  பூர்த்தியாகும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

மிதுனம்

லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பிய படியே செய்து முடிப்பீர்கள். அந்நிய தேச தொடர்பு அனுகூலம் தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்திசெய்வீர்கள்.

கடகம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள்.  விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

சிம்மம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

கன்னி

நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும்.

துலாம்

சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரி செய்யும் எண்ணம் உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.

விருச்சகம்

பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும்.  புகழ்மிக்க வர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

தனுசு

இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழி சலுகை கிட்டும்.

மகரம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரிய மொன்று நடைபெறாவிட்டாலும், திட்ட மிடாத காரியமொன்று நடைபெறும்.

கும்பம்

விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இனம்புரியாத கவலைகள் மாற இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் மேலதி காரிகளை அனுசரித்துச்செல்வது நல்லது.

மீனம்

பிறரை விமர்சிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும் நாள். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Live Updates COVID-19 CASES
Close