தொழில்நுட்பம்

மொழிபெயர்ப்பு கருவி : எந்த நாட்டுக்குப் போனாலும் தமிழிலேயே பேசலாம்!

உலகம் முழுவதும் பயணம் செய்ய எல்லோருக்கும் ஆசை இருக்கும். அப்படியே பயணம் செய்தாலும் நாம் செல்லும் இடங்களில் இருக்கும் மனிதர்களுடன் உறவாட முதல் தடையாக மொழி நிற்கும்.

உலகம் சுற்றும் வாலிபர்களுக்காக பிரத்யேகமாக இதை வடிவமைத்திருக்கிறது ‘லாங்கோகோ’ நிறுவனம். ஸ்மார்ட்போனை விட சிறிய அளவில் இருக்கும் இந்தக் கருவி தமிழ், இந்தி உட்பட 105 மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஒன்றிலிருந்து இன்னொரு மொழிக்கு உடனடியாக மொழி பெயர்த்துத் தருகிறது.

வை-பை வசதியும் இதிலுள்ளது. சிம் கார்டை பொருத்திவிட்டால் இணைய சேவையையும் பெறமுடியும். செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இந்தக் கருவியில் பருவ நிலையைக் கூட நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மொழி பெயர்ப்பின் போது உண்டாகும் சின்னச் சின்ன தவறுகள் காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும். ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது பாக்கெட் டிரான்ஸ்லேட்டர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker