அரசியல்தமிழ் நாடு

வேலூர் தேர்தல் – பிரசாரம் ஓய்ந்தது…

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த தை அடுத்து, வாக்குப்பதிவுக்காக ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

அந்த தொகுதியில் 5 ஆம் தேதி அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சிலவாரங்களாக பிரசாரத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், தொகுதியில் உள்ள வெளியூர்காரர்களை வெளியேற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 5 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் அந்த தொகுதியில் கருத்து கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பிறப்பித்துள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close