Viral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…!



இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர்.
யாருமே இதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி சிந்திப்பது இல்லை. மேலும் புகைப்பிடித்தால் அவர்களது உடல்நலன் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது அவ்ர்களை சுற்றி உள்ளவர்களின் நலனும் பாதிக்கப்படுகிறது.
கடற்கரை ஓரத்தில் யாரோ ஒருவர் சிகரெட் பிடித்துவிட்டு அதை அணைக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்று உள்ளார்.
அங்கு வாழும் நண்டு ஒன்று அது சிகரெட் என்று தெரியாமல் ஏதோ ஒரு உணவு பொருள் என்று எண்ணி அதை வாயில் வைத்து பார்க்கிறது.
அங்கு உள்ள நபர் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகவே பலரும் இதை பார்த்து கொந்தளிக்கின்றனர்.
இதோ அந்த வீடியோ..
இன்னும் மீன் மட்டும்தான் சிகிரெட் அடிச்சி நான் பார்க்கலை… சிகிரெட் அடிச்சிட்டு, அதை அமத்தி போட இரண்டு நிமிஷம் ஆகுமா?.. நண்டும் என்னன்னே தெரியாம எடுத்து ஊதி பாக்குது.. pic.twitter.com/Tbb88abQl8
— Sriramrpckanna (@Sriramrpckanna1) September 22, 2020