ஆன்மீகம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

வைகாசி மாதம் 11 ஆம் தேதி
25.05.2021 செவ்வாய்கிழமை
வருடம் – பிலவ வருடம்.
அயனம் – உத்தராயணம்
ருது – வஸந்த ருது
மாதம் – வைகாசி
பக்ஷம் – சுக்ல பக்ஷம்
திதி – சதுர்த்தசி இரவு 07.56 PM . வரை. பிறகு பௌர்ணமி
ஸ்ரார்த்த திதி – சதுர்த்தசி
நாள் – செவ்வாய்க்கிழமை
நக்ஷத்திரம் – விசாகம்
நல்ல நேரம் – காலை 07.30 AM – 08.30 AM மாலை 04.30 PM – 05.30 PM
ராகு காலம் – 03.00 PM – 04.30 PM
எமகண்டம் – காலை 09.00 AM -10.30 AM
குளிகை – 12.00 NOON – 01.30 PM
சூரிய உதயம் – காலை 05.52 AM
சூரிய அஸ்தமனம் – மாலை 06.30 PM
சந்திராஷ்டமம் – அஸ்வினி
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்

இன்று வைகாசி விசாகம் முருக பெருமானுக்கு விஷேஷமான நாள்.
மற்றும் ஶ்ரீநரஸிம்ஹர் ஜயந்தி.

மேஷம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.
அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.
வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : உறவு மேம்படும்.

ரிஷபம்:

திடீர் யோகத்தால் தனவரவுகள் உண்டாகும்.
வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.
சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : தனவரவுகள் உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுனம்:

பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் தேவை.
உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
பிற்பகலுக்குமேல் மனநிலை மாறி உற்சாகமாக இருப்பீர்கள். இன்று துர்கை வழிபாடு நன்மை தரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும்.
திருவாதிரை : நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தரும்.
புனர்பூசம் வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கடகம்

தீர்ப்புகளில் சாதகமான எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும்.
கடன் பிரச்சனைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பூசம் : நினைத்தது நிறைவேறும் நாள்.
ஆயில்யம் : லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும்.
பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : சகோதரரால் அனுகூலம்.
பூரம் : செலவுகள் கூடும்.
உத்திரம் : சாதகமான நாள்.

கன்னி:

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.
கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.
தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். விநாயகர் வழிபாடு நலம் தரும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம்: சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
அஸ்தம் :சுபச்செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சித்திரை: தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : வெற்றிகரமான நாள்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : சந்தோஷமான நாள்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம்.
குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.
பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : வேண்டியது கிடைக்கும்.
கேட்டை : பதவி உயரும்.

தனுசு:

சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும்.
அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபட சங்கடங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
பூராடம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
உத்திராடம் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

மகரம்

குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சங்கீத இசைக் கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும்.
பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : வெறி கிடைக்கும்.
திருவோணம் : உற்சாகம் உண்டாகும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : மதிப்புகள் உயரும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்:

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
குடும்பத்தினர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.
பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரேவதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close