ஆன்மீகம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்:22.05.2021

இன்றைய ராசி பலன்:22.05.2021

மங்களகரமான பிலவ வருடம்
வைகாசி மாதம் 8 ஆம் தேதி
ரிஷப மாதம்,உத்தராயணம்,வசந்த ருது,
உத்திரம் காலை 10.10 மணி வரை பிறகு ஹஸ்தம்
திதி ஏகாதசி,
யோகம் மரண யோகம்,
சூலம் கிழக்கு,
பரிகாரம்: தயிர்,
நல்ல நேரம்:காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை :4.30 மணி முதல் 5.30 மணி வரை

ராகு காலம்:9 – 10.30
எமகண்டம்:1.30 – 3
குளிகை நேரம்:6 – 7.30

மேஷம்:
மேஷ ராசி அன்பர்களே,

இன்று சுறுசுறுப்புடனும்,உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள்.எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்.
எதிலும் பொறுமை,நிதானத்துடன் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.
பண வரவு,தன வரவு நன்றாக இருக்கும்.
வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செல்லவும்.
உடல் நலனில் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
வேலை செய்யும் இடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும்.உறவினர்களால்,நண்பர்களால் மகிழ்ச்சி பெருகும்.
பேச்சு வன்மை கூடும்.வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
பொன்,பொருள்,ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும்.
அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:1
ராசியான நிறம்:ஆரஞ்சு

ரிஷபம்:
ரிஷப ராசி அன்பர்களே,

இன்று சுபிக்ஷமான நாள்.எதையும் முயற்சி செய்து வெற்றி அடைவீர்கள்.
மற்றவரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அரசு வழியில் அனுகூலம் கிட்டும்.
பணி செய்யும் இடங்களில் ஊதிய உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும்
மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
பண வரவு,பொருள் வரவு கிட்டும்.
வாகனங்களில் செல்லும் பொது எச்சரிக்கை அவசியம்.

அனுகூலமான திசை:கிழக்கு
அதிர்ஷ்ட எண்:3
ராசியான நிறம்:சிவப்பு

மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களே,

உங்களுக்கு இன்று சற்று பின்னடைவு எல்லாவற்றிலும் இருக்கும்.
குரு பார்வையால் எடுக்கும் காரியங்களில் தாமதம்,வீண் அலைச்சல் ஏற்படும்.
சனியின் பார்வையால் குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் வரும்.
வண்டி,வாகனம் ஆகியவற்றால் அனுகூலம் கிடைக்கும்.
வெளி நாட்டிலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கணவன்,மனைவி அன்பு கூடும்.
பிள்ளைகளிடம் அன்பாகவும்,பணிவாகவும் நடந்து கொள்ளவும்.
பொருளாதாரம் சுமாராக இருக்கும்.
உங்கள் காரியங்கள் சாதகமாக சற்று விட்டுக்கொடுத்து செல்லவும்.
வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கவும்.

அனுகூலமான திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்:6
ராசியான நிறம்:பச்சை

கடகம்:
கடக ராசி அன்பர்களே,
உங்களது பரபரப்பு,பதற்றம் இவற்றை குறைத்து கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.
வருமானம்,பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
பொன்,பொருள்,ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கடன் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.கணவன்,மனைவி சண்டை சச்சரவு ஏற்படும்.
எடுத்த முயற்சிகளில் நண்பர்களின் உதவியால் வெற்றி அடைவீர்கள்.
புத்துணர்ச்சியும்,மனத்தெளிவு கிடைக்கும்.
தொழில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
உபரி வருமானம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

அனுகூலமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்:3
ராசியான நிறம்:மஞ்சள்

சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே,

குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.இதனால் நீங்கள் மனநிறைவு அடைவீர்கள்.
வேலையில் சோர்வு,தளர்வு வந்து நீங்கும்.
மனத்தெளிவோடு எதையும் சிந்தித்து செய்தால் வெற்றி நிச்சயம்.
எதிர்ப்பாராத செலவு இருந்தாலும் தேவையான இருப்பு கையில் இருப்பதால் சமாளிப்பீர்கள்.
பணிச்சுமை அதிகம் இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.
அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:1
ராசியான நிறம்:இளஞ்சிவப்பு

கன்னி:
கன்னி ராசி அன்பர்களே,

எடுக்கும் காரியங்களில் இழுபறி இருந்தாலும் திட்டமிட்டு விரைவில் முடிப்பீர்கள். சகோதர,சகோதரிகள் வழியில் ஆதாயம் கிடைக்கும்.
மதிப்பு,அந்தஸ்து கூடும்.
தொழிலில் உங்கள் வாக்குவன்மையால் சிறந்த லாபம் ஈட்டுவீர்கள்.
வண்டி,வாகன சேர்க்கை உண்டாகும்.
வேலை செய்யும் இடங்களில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்,மனைவி புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்.
காதல்,திருமணம் சுமாராக இருக்கும்.
உடல் நலனில் கவனம் தேவை.

அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:2
ராசியான நிறம்:ரோஸ்

துலாம்:
துலா ராசி அன்பர்களே,

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கடைபிடித்து அதன்படி லாபம் பெறுவீர்கள்.
சகோதர,சகோதரி வழியில் அனுகூலம் கிட்டும்.
உங்களின் கடனச்சுமை குறைய தனவரவு கிடைக்கும்.
செய்யும் தொழில் மன நிறைவு,திருப்தி ஏற்படும்.
மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
தொழில் முன்னேற்றம் ஏற்படும்.கணவன்,மனைவி அன்பு பாராட்டுவீர்கள்.உடல் நலனில் கவனம் தேவை.
சளி,இருமல் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

அனுகூலமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்:4
ராசியான நிறம்:நீலநிறம்

விருச்சிகம்:
விருச்சிக ராசி அன்பர்களே,

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டு வேலை செய்து பாராட்டை பெறுவீர்கள்.
மேலதிகாரிகளிடம் சற்று ஒத்துழைத்து செல்லவும்.வியாபாரம்,தொழில் ஆகியவை முன்னேற்றம் ஏற்படும்.
வண்டி வாகன சேர்க்கை உண்டாகும்.
சகோதர,சகோதரி வழிகளில் உதவி கிடைக்கும்.
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும்.
கணவன்,மனைவி உறவு மேம்படும்.
பணவரவு,பொருள்வரவு அதிகரிக்கும்.சேமிப்பு அதிகமாகும்.
செரிமானம்,வயிறு சம்பந்தமான தொல்லைகள் ஏற்படும் உடல் நலனில் கவனம் தேவை.

அனுகூலமான திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்:2
ராசியான நிறம்:மெரூன்

தனுசு:
தனுசு ராசி அன்பர்களே,

குரு பகவான் அருளால் பொன்,பொருள்,ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும்.தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

பணி செய்யும் இடங்களில் ஊதிய உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
நினைத்த காரியம் கைகூடும்.
மாணவமணிகளுக்கு கல்வி முன்னேற்றம் ஏற்படும்.
உறவினர்களால்,நண்பர்களால் ஆதாயம் உண்டு.
கொடுக்கல்,வாங்கல் சிறப்பாக இருக்கும்.

அனுகூலமான திசை:கிழக்கு
அதிர்ஷ்ட எண்:1
ராசியான நிறம்:ஆரஞ்சு

மகரம்:
மகர ராசி அன்பர்களே,

வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
எடுத்த வேலைகள் சற்று தாமதமாகவே முடியும்.
நண்பர்களின் ஆதரவால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
கணவன்,மனைவி அன்பு பாராட்டுவீர்கள்.
வியாபாரம்,தொழில் லாபம் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
கொடுக்கல்,வாங்கல் மேன்மைப்படும்.
மாணவமணிகள் முயற்சி செய்து படித்தால் தான் வெற்றி கிடைக்கும்.

அனுகூலமான திசை:வடக்கு
அதிர்ஷ்ட எண்:6
ராசியான நிறம்:வெள்ளை

கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே,

இன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம்.எதையும் பல முறை யோசித்து செயல்படவும்.
எந்த காரியமும் உடனே நிறைவேறாது,சற்று தாமதமாக தான் முடியும்.

கணவன்,மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வரும் சற்று விட்டுக்கொடுத்து செல்லவும்.
தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பொருளாதாரம் ஏற்ற,இறக்கமாக இருக்கும்.
மாணவமணிகள் கடின உழைப்பினால் தான் முன்னேறமுடியும்.
பணிக்கு செல்பவர்களுக்கு உதவிகள் கிடைக்க தாமதமாகும்.
சகோதர,சகோதரி வழிகளில் ஆதாயம் உண்டு.

அனுகூலமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்:9
ராசியான நிறம்:பச்சை

மீனம்:
மீன ராசி அன்பர்களே,

இன்று உங்களுடைய குழப்பங்கள் தீர்ந்து மனத்தெளிவு பெறும் நாள்.
யோகம் தரும் நாள்.பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
உறவினர்களால்,நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
கணவன்,மனைவி அன்பு பெருகும்.
சுப காரியம் நடத்த,சுப காரியங்களில் பங்கு கொள்ள நேரிடும்.
கல்வியில் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் நாள்.
தொழில்,வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும்.
உடல் நலனில் கவனம் தேவை.

அனுகூலமான திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்:8
ராசியான நிறம்:பிரவுன்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close