Coronaஇந்தியாமருத்துவம்
Trending

கறுப்பு பூஞ்சைக்கு போட்டியா: வெள்ளை பூஞ்சை:

"கேண்டிடையாசிஸ்" எனப்படும் வெள்ளை பூஞ்சை

கறுப்பு பூஞ்சைக்கு போட்டியா: வெள்ளை பூஞ்சை:

பீஹாரில் வெள்ளை பூஞ்சை என்ற நோய் தற்போது பரவ துவங்கி யுள்ளது.கறுப்பு பூஞ்சை தொற்று பரவலுக்கு மத்தியில் அதைவிட ஆபத்தான இந்த நோய் பீகார் தலைநகர் பாட்னாவில் நான்கு பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

நம் நாட்டில் கொரோனா பரவலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த வைரஸை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் “மியூகோர் மைக்கோசிஸ்” என்ற கறுப்பு பூஞ்சையால் பாதிப்படைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

ராஜஸ்தான்,தெலுங்கானா மாநிலங்களில் இந்த தொற்று அதிகம் பரவி வருகிறது.இந்த நோய் சிகிச்சைக்கு தேவையான “ஆம்போ டெரிசின் பி” என்ற மருந்தை தயாரிக்க மத்திய சுகாதார துறை ஐந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி உள்ளது.

இந்த நிறுவனங்கள் ஜூலை மாதம் முதல் 1.11 லட்சம் மருந்து குப்பிகளை தயாரிக்க உள்ளதாக கூறுகின்றனர்.

கறுப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“கேண்டிடையாசிஸ்” எனப்படும் வெள்ளை பூஞ்சை நோய் பீகார் தலைநகர் பாட்னாவில் நான்கு பேருக்கு பரவியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

நுரையீரல் மட்டுமல்லாமல் நகங்கள்,சருமம்,வயிறு,சிறுநீரகம்,மூளை,
வாய் என அனைத்து உடல் உறுப்புகளும் இதனால் பாதிப்படைகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close