கறுப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை க்கு போட்டியாக, இதோ நானும் வருகிறேன் மஞ்சள் பூஞ்சை:
மஞ்சள் பூஞ்சை:



கறுப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை க்கு போட்டியாக,
இதோ நானும் வருகிறேன் மஞ்சள் பூஞ்சை:
சமீப காலமாக இந்தியாவில் பரவி வரும் தொற்றுகளில் கறுப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் இருந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவி மக்களை அசச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.இதிலிருந்து மீள்வதற்கு மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும்,ஊரடங்கு அறிவித்தும் வருகிறது.
இந்நிலையில் கறுப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் தமிழகம்,புதுச்சேரி,குஜராத்,ராஜஸ்தான் என பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது உத்திரபிரதேசத்தில் மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இது கறுப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோயை விட அபாயகரமானது.
சோம்பல்,பசியின்மை,உடல் எடை இழப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.இந்த பூஞ்சையினால் சீழ் வடிதல்,ஊட்டச்சத்து குறைபாடு,உடல் உறுப்பு செயலிழப்பு,காயம் குணமாக தாமதமாவது மற்றும் கண்கள் பாதிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
சுத்தமில்லாத சுற்றுப்புற சூழல் தான் இந்த நோய் பாதிப்பு ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த நோயை கண்டறிந்து முன்பே முறையான சிகிச்சை பெற்றால் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.