CoronadieselPetrolஇந்தியாதொழில்தொழில்நுட்பம்

டாடாவின் மலிவு விலை மின்சார கார், இந்தியர்கள் அதிக வரவேற்பு:

டாடாவின் மலிவு விலை மின்சார கார்,
இந்தியர்கள் அதிக வரவேற்பு:

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.காரணம் பெட்ரோல்,டீசல் விலையை கருத்தில் கொண்டும்,மேலும் அவற்றை விட மின்சார வாகனங்கள் பல மடங்கு சிறந்ததாக செயல்படுவதாலும் மக்கள் இதன் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதனால் உலகெங்கும் மின்சார வாகனங்கள் சிறந்த விற்பனை வளர்ச்சியைப் பெற தொடங்குகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான மின்சார கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் இடம் பிடிப்பது மலிவு விலை காரான நெக்ஸானே ஆகும்.

நெக்ஸான் இவி கடந்த ஏப்ரல் மாதத்தில் 525 யூனிட் வரை விற்பனையாகியுள்ளது.இந்தியாவில் மொத்தம் விற்பனையான மின்சார கார்கள் ஏப்ரல் மாதம் மட்டும் 749 ஆகும்.

இதில் 525 யூனிட்டுகள் டாடா நெக்ஸான் இவி கார்களாகும்.
இந்தியா மின்சார கார் விற்பனையில் 70 % பங்கினை நெக்ஸான் இவி பிடித்திருக்கின்றது.

இது இந்தியா மின் வாகன சந்தைக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இரண்டாம் இடத்தை எம்ஜி நிறுவனத்தின் இசட் எஸ் இவி எட்டியுள்ளது.
மூன்றாம் இடத்தை டாடா டிகோர் இவி யும்,நான்காம் இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா இவி யும் எட்டியுள்ளது.

பொதுவாக விற்பனையாகும் மின்சார கார்கள் மற்ற மாதத்தை காட்டிலும் ஏப்ரல் இல் குறைவாகவே விற்பனையாகி உள்ளன.
இந்த விற்பனை குறைவுக்கு காரணம் பெரும்பாலான இடங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதே என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close