Coronaஅரசியல்சினிமா
Trending

நடிகை நிக்கி கல்ராணியின் முயற்சி: வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி:

நடிகை நிக்கி கல்ராணியின் முயற்சி:

நடிகை நிக்கி கல்ராணியின் முயற்சி:
வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி:

கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நிக்கி கல்ராணி.
என்னவெல்லாம் செய்ய போகிறார்.

மொட்டைசிவா,கெட்டசிவா,கலகலப்பு-2 போன்ற தமிழ்ப்படங்களிலும்,கன்னடம்,மலையாளம் ஆகிய பிற மொழி படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நிக்கி கல்ராணி.

இசையமைப்பாளர்,நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த டார்லிங் படத்தில் அறிமுகமானவர்.

இணையத்தளத்தில் பிரபலமடைந்து வரும் திரிப்ட் ஷாப்பிங் என்ற முறையை இவர் கையாளத் தொடங்கியுள்ளார்.

தம் இன்ஸ்டாகிராமில் ,வெளியிட்டுள்ள வீடியோவில் தாம் எப்போதும்
எளிமையாகவே இருப்பதாகவும், குறைவானதே நிறைவு என்றும் கூறி உள்ளார்.

இந்த கொள்கை ஆடைகளுக்கு பொருந்தும்.தேவைகளை மிஞ்சி இருக்கும் ஆடைகளை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்த போவதாக கூறி உள்ளார்.

தன் திட்டத்தின் படி நிக்கி கல்ராணி ஒரு குழுவை உருவாக்கி “Take 2 – Thrift to Uplift” என்ற முயற்சியை எடுத்துள்ளார்.இதன்படி தானமாக பெறப்படும் பொருட்களை விற்று அதில் பெரும் பணத்தை தேவையுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்போவதாக கூறியுள்ளார்.

மக்களுக்கு உதவ விருப்பமுள்ள அனைவரும்,உபயோகிக்காத நலல தரத்தில் உள்ள ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், காலணிகள், கைப்பைகளை கொடுக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.

பெறுவதை விட கொடுப்பது தானே மகிழ்ச்சி. அத்தகையை மகிழ்ச்சியினால் தாம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close