சினிமா

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

Actress meena husband passed away

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் மீனா.இவர் 2009 இல் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை மணந்தார்,இந்த தம்பதியின் குழந்தைதான் ‘தெறி’ படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நடித்த நைனிகா.

கொரோனா தொற்று இந்த உலகத்தேயே புரட்டிப்போட்டுள்ளது. அதன் தாக்கம் சாமானியன் முதல் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டார் வித்யாசாகர்.

அதிலிருந்து மீண்டு வந்தாலும் ,கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close