இந்தியா

மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பாபு மீட்பு!

Babu rescues youth trapped in mountain pass

மலம்புழாவைச் சேர்ந்த பாபு கடந்த 7-ஆம் தேதி நண்பர்களுடன் மலையேற்றத்திற்க்காக குறும்பச்சி சென்றபோது நடுவழியில் கால் இடறியதில் அவர் உருண்டு விழுந்து மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் விழுந்தார்.

உடனே அவரது நண்பர்கள் மீட்க முயன்றும் பயனளிக்கவில்லை. பின்னர், மலையில் இருந்து கீழே வந்த நண்பர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர் ராணுவத்தின் உதவியை நாடினார். இந்நிலையில், உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த இளைஞர் பாபுவை 43 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close