தொழில்

இன்று நள்ளிரவு தொடங்குகிறது – கன்னியா குமரில் மீன்பிடி தடைக்காலம்

banned fishing in kanyakumari district

குமரி கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.
குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.மேற்கு கடற்கரையான குளச்சல், முட்டம் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்குகிறது. குளச்சல் துறைமுகத்திற்கு பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன.குளச்சல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் என்ஜின்களை பழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close