


தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. புதிதாக 50,407 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தினசரி தொற்றுபாதிப்பு, மருத்துவமனை சேர்க்கை சரிகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 67 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக சரிந்தது.
இன்று புதிதாக 50,407 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இது நேற்றைய பாதிப்பை விட 13 சதவீதம் குறைவானதாகும்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்றுக்கு தற்போது 6,10,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 1,72,29,47,688 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.