அரசியல்தமிழ் நாடு

மகளிர்க்கு பேருந்து கட்டணம் இலவசம்; கொரோனா நிவாரணம்,ஆவின்பால் விலை குறைப்பு:

அனைத்து மகளிரும் நாளை முதல் தமிழக அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர்,மு.க.ஸ்டாலின்முதலில் தலைமை செயலகம் வருகை புரிந்தார்.அங்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின்னர் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

நாளை முதல் அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.மே 16 முதல் ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைகிறது.கொரோனா நிவாரணமாக ரூ.4000/- குடும்பத்துக்கு வழங்கப்படும்.

கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் ஆகிய முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் பயண அட்டை இல்லாமலும்,கட்டணமில்லாமலும் பயணிக்கலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close