விளையாட்டு

பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை உற்று கவனித்த உலக சாம்பியன் கார்ல்சன்

chess olympiad world champion carlson observes pragnanandas game

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற 5வது சுற்று ஆட்டத்தில் நார்வே நாட்டை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் கார்ல்சன் – ஜாம்பியா வீரர் கிலன் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 26வது நகர்த்தலில் ஜாம்பியா வீரரை வீழ்த்தி கார்ல்சன் வெற்றி பெற்றார். மறுபுறம் இந்திய ‘பி’ அணியினர் ஸ்பெயின் அணியுடன் விளையாடி வருகின்றனர் . இந்த ஆட்டத்தில் ‘பி’ இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் என 3 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

போட்டியின் போது இடைவெளி நேரத்தில் கார்ல்சன், செஸ் வீரர்களின் விளையாட்டை பார்வையிட்டபடி சென்றார். அப்போது, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா விளையாடி கொண்டிருந்ததை கார்ல்சன் சிறிது நேரம் அங்கேயே நின்று பிரக்ஞானந்தாவின் விளையாட்டை கவனித்து விட்டு நகர்ந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.முன்னதாக சர்வதேச போட்டிகளில் கார்ல்சனை பிரக்ஞானந்தா 2 முறை வீழ்த்தியிருந்தார்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close