இந்தியாவிவசாயம்

மத்திய அரசின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடக்கம்

மத்திய அரசின் 2019-20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், சுமார் 500 விவசாயிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

60 வயதை பூர்த்தியாகும் அனைத்து விவசாயிக்கும்  ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம் அளிக்கும் இத்திட்டத்திற்கு ‘பிரதான் மந்திரி கிஸான் மான்-தன் யோஜ்னா‘ என்று பெயர்.

சமீபத்தில் உருவாகியுள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 2 அல்லது 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதத்துக்கு ரூ. 3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது , 18 முதல் 40 வயதுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முடியும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை விவசாயிகள் கட்ட வேண்டியிருக்கும். அதற்கு இணையான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தி வரும்.

ஓய்வுத் தேதிக்கு முன் ஒரு விவசாயி இறந்து விட்டால், அவருடைய மனைவி அதே திட்டத்தில் தொடர முடியும். இதை அவர் விரும்பாவிட்டால், அந்த விவசாயி அதுவரை கட்டிய முழுத் தொகையும் வட்டியுடன் அவருடைய மனைவிக்குக் கொடுக்கப்படும்.

Common Service Centres(CSCs) எனப்படும் பொதுச் சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close