தமிழ் நாடு

வணிகப் பயன்பாட்டுக்கான – சிலிண்டரின் விலையை குறைத்து அதிரடி உத்தரவு

Decreasing the amount for commercial use

பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.102.50 உயர்த்தின.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழிலாளருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.3 அதிகரித்து ரூ.1018.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.2499-லிருந்து ரூ.8 அதிகரித்து ரூ.2507 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2373-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close