விளையாட்டு

காமன்வெல்த்: பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

commonwealth , narendra modi congratulates soldiers who won medals

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற் ஆண்களுக்கான (+109 கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார்.

அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் உயரம் தாண்டுதலில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை தேஜஸ்வின் சங்கர் வென்று அசத்தினார். இந்நிலையில் காமல்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தேஜஸ்வின் சங்கர் வரலாறு படைத்தார். அவர் காமல்வெல்த் போட்டியில் எங்கள் முதல் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்.

அவரது முயற்சியில் பெருமை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். அவர் தொடர்ந்து வெற்றி பெறட்டும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதன்படி காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close