Coronaஇந்தியா

இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…!!

புது ஆண்டில் புது வேகத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது . ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர் .

இந்த நிலை மாறி இப்போது ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு பாதிப்பு என்கிற நிலையில், கொரோனா பரவல் ‘ராக்கெட் ’ வேகம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது .

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,63,17,927 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுக்கு 11,17,531 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,54,61,39,465 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,32,024 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 18,86,935 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 69,71,61,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close