இந்தியா

திருமண வரவேற்பில் மயங்கி விழுந்து இறந்த மகள் பெற்றோர் செய்த புரட்சி

கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மயங்கி விழுந்து மூளைச்சாவடைந்த மகளின் உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்த பெற்றோரின் செயலை, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே. சுதாகர் பாராட்டியுள்ளார்.

26 வயது நிரம்பிய சைத்ரா. திருமணக் கோலத்தில், மணமகனுடன், விருந்தினர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று, புகைப்படங்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்த மணமகள், திடீரென மயங்கி சரிந்தார்.

உடனடியாக மணமகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவடைந்துவிட்டதாகக் கூறிவிட்டார்.திருமண வீடே சோகத்தில் மூழ்கியது.

தங்களது மகளின் மரணம் ஒரு முடிவாக இருக்கக் கூடாது, பல உயிர்களின் துவக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

தங்களது பெண்ணின் முக்கிய உடல் உறுப்புகளை தானமளிக்க முன் வந்தனர். துயரத்தில் இருந்த பெற்றோர் எடுத்த இந்த முடிவு பலரும் தங்களது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close