சினிமா

# Flash news – பாடகர் கேகே மாரடைப்பால் இயற்கை ஏய்தினார் ..

singer kk dies in kolkatta at 53

பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் கொல்கத்தாவில் காலமானார்(அவருக்கு வயது 53). கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார் .
இரவு 10:30 மணியளவில் கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பாடகர் கேகே இந்தியத் திரையுலகின் பல்துறைகளில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் படி உள்ளார் . அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் 66க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியுள்ளார்.3 வயதான பாடகர் கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார். தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் “பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது”பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close