IPL 2022 ஏலம் : ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று முதல் பெங்களூரில் நடைபெறுகிறது
IPL 2022 Mega Auction



ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் மெகா ஏலம், பெங்களூரில் தொடங்குகிறது.
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகப்பட்சம் 25 வீரர்களையும் அணியில் வைத்திருக்கலாம்.
பல வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்படலாம். ஏலத்தில் 10 அணிகள் 590 வீரர்களுக்காக சுமார் 561 கோடி செலவழிக்கப் போகின்றன.
ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று முதல் பெங்களூரில் நடைபெற உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 30 கிரிக்கெட்டர்கள் இடம் பெற்றுள்ளனர். நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே டிராபி தொடர்களில் தமிழ் நாடு அணி சிறப்பாக செயல்பட்டதால், தமிழக வீரர்கள் அதிகத் தொகையில் ஏலம் போகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஐபிஎல் 2022க்கான ஏலம் 12 பிப்ரவரி 2022 அன்று இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு தொடங்கும்.
590 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் இருப்பார்கள்.
19 நாடுகளைச் சேர்ந்த 1214 வீரர்கள் மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 590 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.