சினிமா

ஜெயம் ரவியின் திரையுலகில் 19 ஆண்டுகள் நிறைவுசெய்த நெகிழ்ச்சி

Jayam ravi tweets " Everything as it was yesterday" ,i am very happy to be 19th years completed in film industry

ஜெயம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அவரது திரை பயணத்தில் முக்கிய படமானது  .

அதனை தொடந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் சினிமாவில் அறிமுகமாகி நேற்றோடு 19 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அவர் டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்  “எல்லாம் நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது “. என் முதல் படமான ஜெயம் படத்துக்குக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது.

  •    இந்த திரைப்பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு நடிகன்.  அவர்கள் பார்வையை திரையில் மொழிபெயர்த்த ஒரு ஊடகம் மட்டுமே.
  • எனது திறமை மற்றும் ஆர்வத்திற்கு முழு ஆதரவாக எனது தந்தை இருந்துள்ளார்.
    ஒரு நடிகராக இருபப்தற்கான எனது திறனை நான் சுயமாக உணரும் முன்பே, எனக்கு அவர் அடையாளம் காட்டினார்.
  • உணர்வுபூர்வமான தருணங்களில் ஆதரவாக இருந்த என் அம்மா தான் என் முதுகெலும்பு.
  • எனது மூத்த சகோதரர் ராஜ எப்போதும் ஒரு வெற்றிகரமான நடிகராக என்னை கற்பனை செய்து, அவரது முத்திரை கையால் என்னை நட்சத்திரமாக மிளிர்ச் செய்தார்.
  • என்னுடைய முதல் விமர்சகரும் நண்பருமான என் மனைவி ஆர்த்திக்கு நன்றி.
  • ரசிகர்களின் நிபந்தையற்ற அன்பும், ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதற்கு நிறைய பொறுப்புகளை என்னுள் விதைத்துள்ளது.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close