சினிமா

ஹாலிவுட் படம், எல்லைகளை விரிக்கும் காஜல்

சீதா’ (தெலுங்கு) படத்திற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் கைவசம் தமிழில் ஜெயம் ரவியின் ‘கோமாளி’, ‘பாரிஸ் பாரிஸ்’, கமலின் ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் ஷர்வானந்தின் ‘ரணரங்கம்’ என நான்கு படங்கள் உள்ளது. இதில் ‘கோமாளி’ மற்றும் ‘ரணரங்கம்’ ஆகிய இரண்டு படங்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில், காஜல் அகர்வால் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டானார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் சீரிஸை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளாராம். இதில் ஹீரோவாக வைபவ் நடிக்கவுள்ளார். 10 எபிசோடுகளை கொண்ட இதன் ஷூட்டிங்கை இம்மாதம் (ஆகஸ்ட்) துவங்கவுள்ளனர்.

முழு படப்பிடிப்பையும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இவ்வெப் சீரிஸ் ‘ஹாட் ஸ்டார்’ என்ற இணையதளத்தில் ரிலீஸாகுமாம். தற்போது, இதில் முக்கிய வேடத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களைத் தொடர்ந்து ஹாலிவுட் படம், வெப் சீரிஸ் என தனது எல்லைகளை விரித்துள்ளார் காஜல் அகர்வால்

சமீபத்தில் தெலுங்கில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘சீதா’ திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து தமிழில் ‘கோமாளி’, ‘பாரீஸ் பாரீஸ்’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘ரணரங்கம்’ என்னும் படத்திலும் நடித்துள்ளார். இதில் ‘கோமாளி’ மற்றும் ‘ரணரங்கம்’ ஆகிய படங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள காஜல் அகர்வால், தன் கவனத்தை ஹாலிவுட் பக்கமும் திருப்பியிருக்கிறார். அங்கு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. அந்தப் படத்துக்கு முன்னதாக 10 அத்தியாயங்கள் கொண்ட வெப் சிரீஸ் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளார். முழுக்க நாயகியை மையப்படுத்தி நகரும் இந்த வெப் சிரீஸிலும் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால்.

கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியுள்ள காஜல் அகர்வால், தனது மற்ற படங்களின் கால்ஷீட் தேதிகளை வகைப்படுத்திவிட்டு இந்த வெப் சீரீஸ் பக்கம் திரும்புவார் எனத் தெரிகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close