சினிமா

# Kamal Hassan : 400 வசூலில் சாதனை படைத்த விக்ரம்.!

vikram movie has new record in tamil industry

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் காட்சிகள், பின்னணி இசை என ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டது.

படம் வெளியாகி 25 நாட்கள் மேலாகியும் படத்தை பார்க்க இப்போது வரை மக்கள் கூட்டம் பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள் என இரவு காட்சியிலும் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க சென்று கொண்டு இருக்கிறார்கள். வசூலிலும் படம் பல சாதனைகளை படைத்திருந்தது. தமிழகத்தில் மட்டும் படம் 160 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில், அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close