சினிமா

பிரபல பாடகர் கே.கே-வின் உடல் இன்று மும்பையில் தகனம்

most famous singer kk body ceremate in mumbai

கொல்கத்தாவில் நடைபெற்ற  இசை நிகழ்ச்சியில்  திடீரென  மயங்கி விழுந்தர்.  உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாடகர் கே.கே  மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தியத் திரையுலகின்  பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே – இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில்  பாடல்களைப் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில்  66-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு), ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்) உள்ளிட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

கே.கே. உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். கே. கே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அவரின் உடல் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.  மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close