


‘marriage strike’ என்ற ஹேஸ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் சி.ஹரி சங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனைவியின் சம்மதமின்றி கணவன் உடலுறவு கொள்வதைத் தடைவிதிப்பது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களில், #Marriagestrike பிரச்சாரம் ஆண்களில் ஒரு பகுதியினரின் ஆதரவைப் பெற்றுள்ளது, இது போன்ற சட்டம் பெண்களுக்கு பொய் வழக்குகளைத் தாக்கல் செய்ய அதிகாரம் அளிக்கும் என்று வாதிடுகின்றனர்,
41,000 ட்வீட்கள் ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி ட்வீட் செய்தன.
இது சம்மந்தமாக கருத்து சொன்ன பெண்கள் கூட்டமைப்பு “ குடும்பப் பெண்களை ஆண்கள் பாலியல் ரீதியாக துன்பப்படுவத்தினால் அந்த ஆண்களின் மேல் பலாத்கார குற்றம் சுமத்த முடியாது.
திருமணத்திற்குப் பின் பெண்களின் கருத்துக்கள் குறைத்து மதிப்பிடப்படுகின்றது, என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.
பெண்கள் கூட்டமைப்பிற்கான இந்த கருத்திற்கு டிவிட்டரில் எதிர்ப்பு வழுத்து வருகிறது. “ஆண்கள் எப்போதும் இரண்டாம் குடிமகன்களாக பார்க்கப்படுகிறார்கள்.,
ட்விட்டரில் பகிரப்பட்டு வரும் இது போன்ற கருத்துக்கள் தற்போது சர்ச்சைக்குக் காரணமாகியிருக்கின்றன.