ஆன்மீகம்ஆரோக்கியம்மருத்துவம்

பிரார்த்தனை பலிக்கும்,நினைத்தததை நிறைவேறும், மருத்துவ பயன் தரும் பிரம்மமுஹுர்த்தம்

சூரிய உதயத்திற்கு சில மணி நேரம் முன்பு உள்ள காலத்தை பிரம்மமுஹுர்த்த நேரம் என்பார்கள்.அப்போது தேவரும்,முன்னோரும் நம்மை தேடி வருவார்கள்.

அதிகாலையில் விழித்து அவர்களை மதித்து மரியாதையை செய்வதால், அவர்கள் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள்.

பிரம்மமுஹுர்த்தம்: எழுவதால் ஏற்படும் நன்மைகள்,உறங்குவதால் ஏற்படும் தோஷங்கள்:
அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இடைப்பட்ட காலத்தை பிரம்மமுஹுர்த்தம் என்கிறார்கள்.எம பயத்தை நீக்கி கொள்ள நினைப்பவனும், புனர் ஜென்மத்தை அடையாதிருக்க நினைப்பவனும் இந்நேரத்தில் விழித்து கொண்டு இருக்க வேண்டும்.

பிரம்மமுஹுர்த்ததில் உறங்கும் தம்பதிகளின் வீட்டை பித்ருக்கள் ஆசீர்வதிக்க மாட்டார்கள்.மேலும் அவர்களை அசுத்தர்களாய் சகல கர்மாக்களை செய்ய அர்ஹதை அற்றவர்களாக்கி விடுகின்றனர்.
இதனால் புண்ணியம் போய்விடுகின்றது.

நம் மனதை ஒரு நிலை படுத்தி இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

பிரம்மா படைப்புக்கடவுள் இவர் நீண்டகாலமாக உறங்கிவிட்ட நிலையில் சிவபெருமான் இவரை எழுப்பினார். பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகலாக்க வேண்டும் அதாவது இந்த கலி யுகத்தை மாற்றி சத் யுகம் என்ற ஒன்றை பூமியில் ஏற்படுத்த வேண்டும் என்று பிரம்மாவிற்கு சிவபெருமான் கட்டளை இட்டார்.

அதன்படி உறங்கிக்கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற சரியான நேரம் எது என்று கேட்க,

சிவபெருமானும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்கவும், என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெறவும், நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ளவும் அதிகாலை நேரத்தையும், சந்தியா காலத்தையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்.
பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவர்
பெயராலேயே அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.

இந்த அதிகாலை நேரத்தில் நாமும் கண் விழித்து,குளித்து முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி, தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைக்க பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை சிவபெருமானிடமிருந்து நாமும் அடையமுடியும்.

இந்த நேரத்தில் தான் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் போன்ற ஏதும் இல்லாத சுபவேளை.

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என பெரியோர்கள் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில் மந்திரங்கள் ஜெபிப்பவர்கள் மனதிலிருந்து அவருடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பி ஜெபம் செய்பவரது
மந்திர ஒலி வெளிப்படுகிறது. இவ்வாறு செய்யும் ஜெபம் அவர்கள் செல்லும் இடமெங்கும் அவரை அறியாமலே நன்மை விளைவிக்கிறது.

பிரம்மா முஹுர்த்தத்திற்கு அபராசக்தி உள்ளது என்பதை நாம் அனுபவ பூர்வமாக அறியலாம்.

மருத்துவ பயன் தரும் பிரஹ்மமுஹுர்த்தம்:

இந்த உடல் இறைவன் நமக்கு அளித்த அற்புத படைப்பு.

ஒவ்வொருவர் தலையிலும் இருப்பது பீனியல் சுரப்பி.இது பார்வை நரம்பு மண்டலத்தோடு இணைக்கப்பட்டது. இது புற்று நோயை குணப்படுத்தும் ஒரு மெல்டனின் என்ற ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது.
இதற்கு ஒரு நிபந்தனை இரவின் இருளாக இருக்க வேண்டும்.
இந்த இருளை பார்வை நரம்பு மூலமாக இது அறிந்து கொள்ளும்.

ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு பிறகு மெல்டனின் நம் ரத்த நாளங்கள் வழியே பாய்ந்தோடும்.நாம் கண்கள் வெளிச்சத்தில் இருந்தால் பீனியல் மெல்டனினை சுரக்காது.

பீனியல் மெல்டனின் சுரப்பதை காலை 5 மணிக்கு நிறுத்திவிடும்.

இரவு நீண்ட நேரம் நாம் கண் விழித்தால் நமக்கு புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கிடைக்காமல் போய்விடும்.
இது போல அதிகாலையில் ஓசோன் காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும்.

இதனை நாம் சுவாசிப்பதால் நமக்கு நோய்களை குணப்படுத்தி ஆயுளை அதிகரிக்கும்.
இந்த அதிகாலை நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமையுடனும், ஆற்றலுடனும் திகழும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close