ஆன்மீகம்ஜோதிடம்

ராசி பலன்:09.05.2021

நாம் இன்று 09 May 2021  12 ராசிகளுக்கான ராசி பலனை காண்போம்.

மேஷம்:

உற்சாகமான ஆற்றல் மிக்க நன்னாளாக இருக்கும்.உங்கள் கடமைகளை மட்டும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்தல் நன்மை விளையும்.

வேலை செய்யும் இடங்களில் சில அசௌகரியங்கள் இருக்கும்.நிதானம் தேவை.
குடும்ப வளர்ச்சிக்காக பணம் செலவு செய்வீர்கள்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

இன்று சில முக்கியமான எடுக்க உகந்த நாளாக இருக்கும்.பணி செய்யும் இடங்களில் சிறந்த ஆற்றலுடன் செயல்பட்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சி கூட பெரிய பலனை தரும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிப்பதற்கான வழிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்:

இன்றைய நாள் நல்ல பலனை அள்ளி கொடுக்கும் நன்னாளாக இருக்கும்.உங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த நேரம் இது தான்.உங்கள் வாழ்க்கை துணை உங்களை புரிந்து கொண்டு அன்பு பாராட்டுவார்கள்.நிதிநிலை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்று தங்கள் கடமைகளை செய்ய கூடுதல் முயற்சி தேவை.வேலை செய்யும் இடங்களில் சற்று பணிச்சுமை அதிகமாக இருக்கும்.வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வதை நன்மை தரும்.பணவரவு சற்று சுமாராக இருக்கும்.உடல் நலனில் அக்கறை தேவை.

சிம்மம்:

இன்று எந்த விஷயங்களையும் பெரிது படுத்தாமல் இருப்பது நன்மை பயக்கும்.இன்று நீங்கள் சற்று விட்டுக்கொடுத்து செல்வது எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லது.பணி இடங்களில் மேலதிகாரிகளை ஓத்து நடப்பது நன்மை தரும்.நீங்கள் திட்டமிட்டு செலவு செய்வது பண இழப்பை தடுக்கும்.அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய நன்னாளாக இருக்கும்.வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமைக்கு பரிசு கிடைக்கும்.வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும்.இன்று வர்த்தகம்,தொழில் மூலம் பணவரவு இருக்கும்.இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள்.

துலாம்:

இந்த நாள் நெடுநாளாக எண்ணி கொண்டிருந்த பெரிய வாய்ப்பு கிடைக்கும் நாள்.பணி இடங்களில் உங்கள் திறமைக்கு சிறந்த வளர்ச்சி கிடைக்கும்.உங்கள் வாழ்க்கை துணையுடன் ஓத்து போவீர்கள்.நிதி நிலைமை நல்ல முன்னேற்றம் அளிக்கும்.

விருச்சிகம்:

இன்று தங்கள் சற்று பொறுமையுடன் யோசித்து எந்த காரியத்தையும் செய்ய வேண்டும்.வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களிடம் ஓத்து செல்வது நன்மை அளிக்கும்.இன்று சற்று குழப்பமான மனநிலை இருக்கும்.தியானம்,தெய்வ பாடல்கள் கேட்பது நன்மை அளிக்கும்.

தனுசு:

தங்கள் எதையும் பொருட் படுத்தாமல் உங்கள் பாதையில் முன்னேறி செல்லுங்கள்.சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம்.பணியில் கவனம் தேவை.மனதில் நல்ல நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி செல்லுங்கள்.முடிந்த வரை அமைதியுடன் இருப்பது எல்லா பிரச்சனைகளுக்கும் நன்மை தரும்.

மகரம்:

உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளாக இருக்கும்.எடுத்த காரியம் வெற்றி அளிக்கும்.பணத்தை பொறுத்தவரை ஏறுமுகமாக இருக்கும்.பணி இடங்களில் பாராட்டு பெறுவீர்கள்.

கும்பம்:

இன்றைய நாள் எதிர்பார்க்கும் அளவுக்கு நன்மை அளிப்பதாக இல்லை.எதையும் பொறுமையுடன் கையாளுவதால் எல்லா பிரச்சனைகளையும் எளிதில் தீர்வு கிடைக்கும்.யோகா,மெடிடேஷன் செய்வது நன்மை தரும்.

மீனம்:

இன்று எடுத்த காரியம் எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்பட்டாலும் சிறிது மனக்கசப்பை தரும். ஒவ்வாமை,சளி தொந்தரவுகள் இருக்கும்.பணப்பற்றாக்குறை இருக்க வாய்ப்பு உள்ளது.எதையும் யோசித்து முடிவெடுங்கள்.நல்லதே நாடாகும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close