ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு



14 முன்னணி நடிகர்களின் படங்களை சேலம் விநியோகஸ்தர்கள் ஏரியாவில் வெளியிடுவதில் இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சில் இணைந்து பங்குபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் திரைப்படங்கள் வெளியிடும்போது ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் செயல்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
[6:50 PM, 7/30/2019] Nandha M: நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சேலம் ஏரியாவில் மொத்தமுள்ள 110 திரையரங்குகளில் 45 டிஜிட்டல் பிரிண்ட் மட்டுமே ரிலீஸ் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
சேலம் மாநகரத்தில் 7 திரையரங்குகள், ஓசூரில் 2, தருமபுரியில் 2, கிருஷ்ணகிரியில் 2, நாமக்கலில் 2, குமாரபாளையத்தில் 2, திருச்செங்கோட்டில் 2 திரையரங்குகள், மற்ற அனைத்து ஊர்களிலும் ஒரு திரையரங்கில் மட்டுமே திரையிட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
சேலம் ஏரியாவில் வியாபாரம் ஆகாத, வெளியிட இயலாத சிறு முதலீட்டுத் திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் நலன் கருதி சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சில் பொறுப்பேற்று 3 சதவீத சர்வீஸ் சார்ஜ் மட்டுமே பெற்றுக் கொண்டு ரிலீஸ் செய்து தருவதாக தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.