சினிமா

வாரிசு திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு.!

second look poster release on varisu movie

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார்.

விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள்.

அதன்படி, தற்போது படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஜய் சில குழந்தைகளுடன் இருக்கிறார். அவரை சுற்றி பொங்கலுக்கு உபயோகபடுத்தும் காய்கறிகள் காமிக்கபட்டுள்ளது. முதல் போஸ்ட்டரை விட இரண்டாவது போஸ்டர் இன்னும் அருமையாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close