விளையாட்டு
உலக சாம்பியன் ஆனார் சிந்து சரித்திர சாதனை



உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி முதல் தங்கப் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார் சிந்து.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் 40 நிமிடங்களில் எளிதாக வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் சிந்து
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி முன்னணி நிலையில் இருந்தார் சிந்து. முதல் தங்கப் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்துவிட்டார் பி.வி சிந்து.