சினிமா

பூஜையுடன் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் SK20 படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக RRR நடிகை?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக RRR நடிகை?

முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 10ம் தேதி காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி பகுதியில் நடக்கவிருக்கிறது, மேலும் படத்தின் சில முக்கியமான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில் நவீன் பாலிஷெட்டி மற்றும் பிரேம்ஜி நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகையான ஒலிவியா மோரிஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Olivia Morris

ஒலிவியா மோரிஸ் தற்போது SS.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

NTR, ராம் சரன், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடித்திருக்கும் இந்த படம் வரும் மார்ச்-25ம் தேதி வெளியாகவுள்ளது.

‘SK20’-ல் சிவகார்த்திகேயனுக்கு, ஜோடியாக ஒலிவியா மோரிஸ் நடிக்கப்போவது குறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close